போர்ட்டலீசா நகரில் அரீனா கேஸ்ட லோவா மைதானத்தில் நேற்றிரவு 9.30 மணிக்கு நடந்த உலக கோப் பை இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, மெக்சிகோவை எதிர்கொண் டது. அங்கு கடும் வெப்பம் நிலவியதால் வீரர்கள் விளை யாட முடியாமல் திணறினர். 89.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் வீரர்கள் தவித்த நிலையில், ஆட்டத்தின் போதும் வீரர்கள் தங்களது உடலை குளிர்விக்க ‘கூலிங் பிரேக்’ வழங்கப்பட்டது. லீக் போட்டிகளின் போது ஆட்டங்களில் ஒரு கோல் மட்டுமே மெக்சிகோ வாங்கியிருந்ததால், இந்த போட்டியிலும் மெக்சி கோவை எதிர்த்து நெதர்லாந்தால் கோல் எதுவும் அடிக்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அனைத்தும் மாறியது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜியோவனி டோஸ் சான்டோஸ் அபாரமான கோல் அடித்து மெக்சிகோவுக்கு முன்னிலையைத் தேடித் தந்தார். இரண்டாவது பாதியில் மெக்சிகோ கோல் கீப்பர் குல்லெர்மோ ஓசோவ், இரண்டு முறை சிறப்பாக பந்துகளை தடுத்து நெதர்லாந்து அணி கோல் அடிக்க விடாமல் செய்தார்.
ஒரு கோல் பின்தங்கியிருந்த நெதர்லாந்து தோல்விப்பாதையில் இருப்பதை உணர்ந்த கோச் வான் கால், தங்களது அணியின் ஆட்டத்தில் மாறுதல் செய்து தாக்குதல் முறையை பின்பற்ற உத்தரவிட்டார். அவரது இந்த முடிவு பலனளித்தது. நெதர்லாந்தின் ஸ்னைடர் அடித்த ஷாட் மெக்சிகோ கோல் கீப்பரின் கையை மீறிப் போனது. 88வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார் ஸ்னைடர். 90 நிமிட ஆட்டம் முடிந்த பின்னர் கூடுதலாக 6 நிமிடம் வழங்கப்பட்டது. இதில் 94வது நிமிடத்தின் போது மெக்சிகோவின் பெனால்டி பாக்ஸ் எல்லைக்கோட்டுக்கு அருகே நெதர்லாந்து வீரர் அர்ஜென் ராபென் பந்தை கடத்திச் செல்ல முயன்றார். அப்போது மெக்சிகோ கேப்டன் ரபெல் மார்க்கஸ் பந்தை தடுக்க முயன்றார். அப்போது காலை இடறிவிட்டது போன்று அலறியபடி பாய்ந்து கீழே விழுந்தார் அர்ஜென் ராபென். இதற்கு முன் மூன்று முறை அர்ஜென் ராபென் பெனாலிடி பாக்ஸ் பகுதிக்குள் டைவ் அடித்து பெனால்டி கிக் வாய்ப்பு கேட்ட போதெல்லாம் அவற்றுக்கு மறுப்பு தெரிவித்த போர்ச்சுகல் நடுவர்
பெட்ரோ புரோயன்கா, இந்த முறை சற்றும் தயங்காமல் பெனால்டிகிக் வாய்ப்பை வழங்கினார். சர்ச்சைக்குரிய இந்த பெனாலிடி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார் மாற்று வீரராக களமிறங்கியிருந்த ஹன்டெ லார். இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து.ராபென் மன்னிப்புநெதர்லாந்து வீரர் அர்ஜென் ராபென் கூறுகையில், ‘‘டைவ் அடித்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல் பாதி ஆட்டத்தின் போது நான் பெனாலிடி எல்லைக்குள் டைவ் அடித்தேன். கடைசி நேரத்தில் டைவ் அடித்ததற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது,’’ என்றார்.மெக்சிகோ கோச் மிகுயில் ஹெரேரா கூறுகையில், ‘‘இந்தப் போட்டியில் ராபென் மூன்று முறை டைவ் அடித்தார். நடுவர் தன்னை ஏமாற்ற முயலும் வீரர் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திரும்ப திரும்ப டைவ் அடித்த போது அவரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றியிருக்க வேண்டும்,’’ என்று ஆத்திரத்துடன் கூறினார்.