2வது ஆட்டத்தில் கொலம்பியா-உருகுவே மோதல்
ரியார்டோஜெனிராவில் நடக்கும் நாக் அவுட் போட்டியில் இன்று நள்ளிரவு 1.30க்கு நடக்கும் போட்டியில் கொலம்பியா அணியை எதிர்த்து உருகுவே விளையாடுகிறது. லீக் சுற்று ஆட்டங்களில் சி பிரிவில் கொலம்பியா ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. டி பிரிவில் பலம் வாய்ந்த இத்தாலி, இங்கிலாந்து அணிகளை உருகுவே வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி வீரரை கடித்ததற்காக உருகுவேயின் நட்சத்திர வீரர் சுராஸ் வெளியேற்றப்பட்டு அவர் 9 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அவர் உலக கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. கொலம்பியா அணியுடன் இதுவரை 38 ஆட்டங்களில் உருகுவே மோதியுள்ளது. இதில் 18 ஆட்டங்களில் சிலியும், 11 முறை கொலம்பியாவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 1990 போட்டியில் நாக் அவுட் சுற்றில் கொலம்பியா கேமரூனிடம் தோல்வியடைந்தது. அதன் பின் இப்போது தான் மீண்டும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.