சினிமா பார்க்க சென்ற ஹன்சிகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவிப்பு
சென்னை: சினிமா பார்க்க சென்ற ஹன்சிகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார்.நடிகை ஹன்சிகா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் நடந்தது. ஷூட்டிங் முடிந்ததும் அதே வளாகத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்கச் சென்றார். உடன் செக்யூரிட்டிகள் யாரும் இல்லாமல் தனியாக சென்ற அவரை அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்போனில் படம்பிடிக்க தொடங்கினார். இதனால் நெரிசல் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஹன்சிகாவை பார்க்கும் ஆர்வத்தில் அவர் மீதும் ரசிகர்கள் விழத் தொடங்கினார்.நிலைமையை சமாளித்த ஹன்சிகா தனது தத்துத் தமிழில் ரசிகர்களிடம் பேசி அவர்களை கவர்ந்தார். ஒரு சிலரின் உதவியுடன் அங்கிருந்து பிறகு வெளியேறினார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘சினிமா பார்க்க சென்றபோது என்னை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். தனியாக எந்த நிலைமையையும் சமாளிக்கும் துணிச்சல் எனக்கு இருக்கிறது. என்னிடம் ரசிகர்கள் யாரும் வம்பு செய்யவில்லை. அவர்களிடம் நான் தமிழில் பேசினேன். என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள் என்றார்.