வேளச்சேரி அருகே தீ விபத்தில் 3 வீடுகள் நாசம்
வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகர் காவேரி தெருவில் ராஜேந்திரன் (35), முனுசாமி, மல்லிகா ஆகியோரது வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. இது மற்ற 2 வீடுகளுக்கும் பரவியது. வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீயை அணைக்க பொதுமக்கள் தண்ணீர் ஊற்றினர். தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது. ரூ.1.50 லட்சம் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறுகின்றனர். பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.