Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
26
Jun
அதிமுக பிரமுகரின் துணிக்கடை ஷட்டர் உடைத்து ரூ12 லட்சம் துணி, பணம் கொள்ளை


புழல்: புழல் அருகே அதிமுக பிரமுகரின் துணிக்கடை ஷட்டரை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து  சென்றனர். இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.புழல் திருநீலகண்டன் நகரை சேர்ந்தவர் ஜாபர் உசேன் (37). புழல் ஒன்றிய  சிறுபான்மை பிரிவு அதிமுக ஒன்றிய செயலாளர். தண்டல்கழனி ஜிஎன்டி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை  பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் ஜாபர் உசேன். இன்று காலையில் வழக்கம் போல¢ கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.  அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கண்ணாடி உடைந்து கிடந்தது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான ஆடைகள்  மாயமாகி இருந்தது தெரிந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் பணமும் கொள்ளை போயிருந்தது.இதுகுறித்து செங்குன்றம் போலீசில் ஜாபர் உசேன் புகார் செய்தார். போலீசார்  வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement