ரியோடி ஜெனிரோ நகரில் நேற்றிரவு நடந்த குரூப் இ பிரிவு போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின. இந்த போட்டியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஈக்வடார் அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. மரகானா ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் 50வது நிமிடத்தில் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் லூகாஸ் டிக்னேவின் காலை இடறிவிட்ட ஈக்வடார் வீரர் அன்டோனியோ சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்கு ஈக்வடார் தள்ளப்பட்டது. இருந்த போதும் ஈக்வடார் அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் பிரான்ஸ் அணியினரால் அவர் களைக் கடந்து கோல் அடிக்க முடி யாமல் போனது குறிப்பிடத்தக்கது.