பஸ் மீது கல்வீச்சு பயணிகள் காயம்
ஆவடி: பூந்தமல்லியில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தடம் எண் 65பி மாநகர பஸ் நேற்றிரவு புறப்பட்டது. 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் மோகன், பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டராக சக்திவேல் பணியாற்றினார். ஆவடி டேங்க் பேக்டரி சாலையில் வந்தபோது அந்த வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர், கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.