ஒரக்காடு ஊராட்சியில் மரம் நடும் விழா
புழல்: சோழவரம் ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சியில் பசுமை குறியீடு மரம் நடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் வசந்தி பாஸ்கர் தலைமை தாங்கினார். வேணுகோபால் எம்.பி., பயிற்சி கலெக்டர் அமர்கொஸ்வாகா முன்னிலை வகித்தனர். கலெக்டர் வீரராகவராவ், மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். அப்பகுதியில் மொத்தம் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதில், மாவட்ட திட்ட இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வீணா, வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் திலகவதி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.