Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
26
Jun
கள்ளக்காதலனுடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்து கணவனை கொன்றேன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஜோலார்பேட்டை: கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் அவரது மனைவி சரண் அடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி மூர்த்தியூர் பகுதியை சோந்தவர் ரமேஷ் (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அம்சா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் கடந்த 16ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ரமேஷின் தம்பி சம்பத் தெரிவித்த தகவலின்பேரில் விஏஓ மீராதேவி, கடந்த 24ம் தேதி ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.  இவ்வழக்கில் தலைமறை வான ரமேஷின் மனைவி அம்சா (35) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அம்சா, திருப்பத்தூர் தாசில்தார் ஜெயக்குமார் முன் சரண் அடைந்தார். தாசில்தாரிடம் அம்சா அளித்துள்ள வாக்குமூலம்:

எனக்கும் குன்னத்தூரை சேர்ந்த திருப்பதி (36) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. எங்களுக்கு இடையூறாக என் கணவர் இருந்தார். எனவே இருவரும் சேர்ந்து அவரை ஒழித்துகட்ட திட்டம் தீட்டினோம். அதன்படி கடந்த 15ம் தேதி பெங்களூரில் வேலைபார்த்து வந்த எனது கணவரை சந்திக்க நானும், திருப்பதியும், மகள் லாவண்யா ஆகிய 3 பேரும் காரில் சென்றோம். 3 பேரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். எனது கணவருக்கு முட்டை பிரைடு ரைஸ் பிடிக்கும் என்பதால் அவருக்கும் ஒரு பார்சல் வாங்கி அதில் திருப்பதி விஷத்தை கலந்தார். வீட்டிற்கு சென்று அதை எனது கணவரிடம் கொடுத்தோம் அவர் சாப்பிட்டவுடன் அவரை காரில் அழைத்து கொண்டு மூர்த்தியூருக்கு புறப்பட்டோம்.

இந்நிலையில் எனது கணவருக்கு மயக்கம் ஏற்பட்டது. எங்களை திருப்பதி, திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார். அப்போது எனது கணவர் வயிற்று வலியால் துடித்தார். அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவிட்டு மூர்த்தியூருக்கு வந்தோம். இரவில் வயிற்றுவலியால் துடித்த எனது கணவர் இறந்தார். மறுநாள் எனது கணவரை மூர்த்தியூரில் அடக்கம் செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதையடுத்து தாசில்தார், அம்சாவை ஜோலார்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார், அம்சாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் திருப்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement