Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
25
Jun
டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டன்: டெலிபோன் ஒட்டு கேட்பு விவாகரத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.இங்கிலாந்தின் முன்னாள் ஊடக தலைவர் ஆன்டி கூல்சனை பதவி நியமனம் செய்ததற்காக பிரதமர் டேவிட் கேமரூன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அவரை தலைவராக நியமித்தது என்னுடைய தவறுதான் என்றும், இது ஒரு தவறான முடிவு என்பதை ஏற்றுகொள்கிறேன் என்றும் டேவிட் கேமரூன் தெரிவித்தார். மேலும், அவருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளித்ததன் மூலம் மீண்டும் அதே தவறை செய்து விட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்தார்.கடந்த 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ‘வேர்ல்டு ஆப் நியூஸ்’ செய்தி ஆசிரியரான ஆன்டி கூல்சன் குற்றவாளி என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு அவரை ஊடகத்துறை தலைவராக டேவிட் கேமரூன் நியமித்தார். மீண்டும் 2010ல் டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமரான போது அவரது அலுவலகத்தில் மீண்டும் கூல்சனுக்கு அதே ஊடக தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர், டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் சிக்கிய கூல்சன் 2011ல் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த விவகாரத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் மன்னிப்பு கேட்டுள்ளது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement