ரூ5 லட்சம் செம்மரக்கட்டை கடத்தல் 4 பேர் பிடிபட்டனர்; ஒருவருக்கு வலை
சித்தூர்: காருடன் ரூ.5 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சித்தூர் மாவட்டம் பாகராபேட்டை மண்டலம் எர்வாரிபாளையம் ஊராட்சி எர்ருசெருவு கிராமம் அருகே செம்மரக்கட்டைகள் கடத்துவதாக பாகராபேட்டை போலீ சாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் ரஹமதுல்லா, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். திருப்பதி-பீலேர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்தவுடன் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 5பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று 4 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் கம்மவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரிகுமார்(35), ரொம்பிசெர்லாவை சேர்ந்த வெங்கடராமரெட்டி(40), லோக நாதரெட்டி(38), திருப்பதியை சேர்ந்த சீனிவாசலு (28) என தெரியவந்தது. காரை சோதனையிட்டதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இருந் தது. இதையடுத்து போலீ சார் காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து ஹரிகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய திருப்பதியை சேர்ந்த பூபதிரெட்டி என்பவரை தேடி வருகின்றனர்.