பெங்களூரிலுள்ள
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கு
எஸ்எஸ்எல்சியுடன் ராணுவ அல்லது துணை ராணுவப் படைகளில் பணியாற்றிய
அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
1. ஜூனியர் சூப்பர்வைசர் (செக்யூரிட்டி); 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.10,050 - 3% - 25,450 மற்றும் இதர படிகள்.
வயது: 1.5.2025 தேதிப்படி 45 ஆண்டுகள்.
தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் ராணுவம் அல்லது கடற்படை அல்லது விமானப்படைகளில் ஏதேனும் ஒன்றில் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசராக முன் அனுபவம்.
சம்பளம்: ரூ.7,960 - 3% - 21,020 மற்றும் இதர படிகள். வயது: 1.5.2025 தேதிப்படி 30 வயது.
தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் பாதுகாப்பு படை/ துணை ராணுவப்படை ஆகியவற்றில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம்.
இட
ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தீயணைப்பு மற்றும் தடுப்பு கோர்சில் சான்றிதழ் படிப்பு, கனரக வாகன ஓட்டுனர்
உரிமம் ஆகியவை விரும்பத்தக்கது.
உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
பொது
மற்றும் ஒபிசியினருக்கு ரூ.300 (எஸ்சி., எஸ்டியினர் விண்ணப்ப கட்டணம்
செலுத்த வேண்டியதில்லை). கட்டணத்தை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின்
இணையதளத்தில் பிரத்தியேக செலானை பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு ஸ்டேட்
வங்கியில் சேவை கட்டணம் ரூ.25 உடன் செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் www.bel-india.com என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy Manager (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, BANGALORE 560013. விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.6.2014.