கங்கனா வேடத்தை ஏற்கும் தமிழ் நடிகைக்கு கண்டிஷன்
சென்னை: தான் நடித்த படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் தரும் ஹீரோயினுக்கு கிரீடம் சூட்டுகிறார் கங்கனா ரனவத்.பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரனவத் நடித்த படம் ‘குயின். இப்படம் திரைக்கு வந்து ஹிட் ஆனது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கி இருக்கிறார். இதில் கங்கனாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் தேர்வானவுடன் அதுபற்றி கங்கனாவே நேரில் அறிவிக்க உள்ளார். இதுபற்றி தியாகராஜன் கூறும்போது,‘குயின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஹீரோயின் தேர்வு செய்யப்பட்டதும் அவர் யார் என்பதை கங்கனா ரனவத் அறிவிப்பதுடன் அவருக்கு கிரீடமும் சூட்ட உள்ளார். அடுத்த இரண்டொரு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் இப்படம் தயாராகிறது என்றார். படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் அதிக நாட்கள் யார் கால்ஷீட் தருகிறார்களே அவர்தான் இதில் நடிக்க தேர்வு செய்யப்படுவார் என்று கண்டிஷன் போடப்படுவதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.