குரேஷியாவை நசுக்கியது மெக்சிகோ
பிரேசில் நாட்டில் ரெசிபே நகரில் நேற்று இரவு நடந்த உலக கோப்பை குரூப் ஏ பிரிவு போட்டியில் குரேஷியா, மெக்சிகோ அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற் றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற குரே ஷியாவின் கனவை தகர்த் தது மெக்சிகோ. முதல் பாதி யில் இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால் கோல் ஏதும் விழவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. இதில் மெக்சிகோ வீரர்களின் கை ஓங்கியது. ஆட்டத்தின் 72, 75, 82வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர் மெக்சிகோ வீரர்கள். சுமார் 10 நிமிடத்துக்குள் அதிரடியாக 3 கோல்களை அடித்தது. மெக்சிகோ மார்கஸ், குவார்டாடோ, ஹெர்ணாண்டஸ் ஆகியோர் கோல் அடித்தனர். இதன் பின்னர் 87வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தது குரேஷியா. 87வது நிமிடத்தில் குரேஷிய வீரர் பெர்சிக் கோல் அடித்தார். இந்த போட்டியில் 3&1 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்றதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மெக்சிகோ.