கதவின் பூட்டை உடைத்து வண்டலூரில் 10 பவுன் திருட்டு
கூடுவாஞ்சேரி: வீட்டு கதவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் கொள்ளையடித்தனர்.சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (28). நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஓட்டேரி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.