Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
23
Jun
இங்கிலாந்தில் 32 ஆயிரம் ராணுவ வீரர்கள் உடல் பருமனால் அவதி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டன்: இங்கிலாந்து ராணுவத்தில் சுமார் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர் என அந்நாட்டு ராணுவ அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. உலக அளவில் இங்கிலாந்து ராணுவம் ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது.  ஆனால், தற்போது அதன் நிலை தலைகீழாக மாறி விட்டது. இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுமார் 32 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் போதிய உடல் தகுதி இன்றி அதிக உடல் பருமன் காரணமாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணுவத்தில் ஆண்டுக்கு இருமுறை ராணுவ வீரர்களுக்கு உடல் தகுதி திறன் சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடல் திறன் தகுதி தேர்வில் தோல்வி அடைந்தனர். மேலும் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர். ஓட்ட பந்தயம், தண்டால் உள்ளிட்ட உடல் தகுதி சோதனைகளை நடத்திய போது கடந்த 2011ல் இருந்து 2014 வரை 29,600 ஆண் வீரர்களும், 2,819 பெண் வீரர்களும் தேர்வில் தோற்றுள்ளனர். மேலும் 22 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் உள்ளன. இதனால் உடல் எடை அதிகமுள்ள ராணுவ வீரர்களுக்கு உடல் எடையை குறைக்க பச்சை காய்கறிகள், கொழுப்பு சத்து குறைவான உணவு வகைகள் போன்றவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement