Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
23
Jun
நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் ரஷ்யாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?


உலக கோப்பை கால்பந்து போட்டியின் எச் பிரிவில் நேற்று இரவு(இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) ரஷ்யாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் கோல் அடித்து பெல்ஜியம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.உலக கோப்பை கால்பந்து போட்டியின் 11வது நாளான நேற்று எச் பிரிவில் உள்ள அணிகள் பங்கேற்ற இரண்டாவது ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. இதில் ரஷ்யா அணியை எதிர்த்து பெல்ஜியம் விளையாடியது. ஏற்கனவே அல்ஜீரியாவுடனான போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. தென்கொரியா&ரஷ்யா அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்திருந்தது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொண்ட ரஷ்யா வெற்றி பெற கடுமையாக போராடியது. பெல்ஜியம் வீரர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அதை நழுவ விட்டனர். 44வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் முன் கள ஆட்டக்காரர் கோக்கரினுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் தலையில் முட்டிக்கொடுத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இரண்டாம் பாதி ஆட்டமும் விறுவிறுப்புடன் நடந்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மிட் பீல்டர் லுக்காக்கிக்கு பதிலாக இளம் வீரர் ஒரிஜி களமிறக்கப்பட்டார். ஆட்டம் முடிய 10 நிமிடங்களே இருந்தன. அதுவரை இரு அணிகளும் கோல் போடாததால் டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 87வது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது. மறு முனையில் இருந்து பந்தை கடத்தி வந்த பெல்ஜியத்தின் எடின் ஹசார்டு, மிக அழகாக ஒரிஜிக்கு பாஸ் செய்தார். அவர் அதை 6 மீட்டர் தூரத்தில் அடித்து கோலாக்கினார். இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே ஒரு புள்ளியுடன் ரஷ்யா மூன்றாமிடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டும். அதேபோல் பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் தென்கொரியா தோல்வியடையும்பட்சத்தில் ரஷ்யாவும் நாக் அவுட் சுற்றுக்கு நுழைய வாய்ப்புள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement