Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
19
Jun
சுற்றுச்சூழல் காப்போம்

உலகிலேயே எரிபொருளாக விறகை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம், காற்றில் அதிக மாசு ஏற்படுத்தும் நாடுகளில் ஒன்றாக நமது நாடு உள்ளது. சுற்றுச்சூழல் நிர்வாகம் குறித்து 178 நாடுகளில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுற்றுச்சூழல் நிர்வாக புள்ளியில் 155வது இடத்தில் இந்தியா உள்ளது. நமது நாட்டில் காற்றில் மாசு கலப்பதை குறைப்பதற்காக கடந்த 1981ம் ஆண்டில் ஒரு சட்டம் கூட கொண்டு வரப்பட்டது. அதற்கும் பெரிய பலன் இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிக முக்கியக் காரணிகளாக இருப்பது பிளாஸ்டிக் கழிவுகளும், எலக்ட்ரானிக் கழிவுகளும்தான். இதே போல், விறகு, மண்ணெண்ணெய், டீசல் பயன்படுத்துவதால் ஏற்படும் மாசு காற்றில் கலந்து சுற்றுச்சூழலை கெடுக்கிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளையே நாம் இன்னும் தடுக்க முடியவில்லை. சுற்றுலா நகரங்களில் அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்திருந்தாலும் அதையும் மீறி கடைகளில் அதை விற்கிறார்கள். மக்கள் அதை பயன்படுத்துகிறார்கள். எல்லா நகரங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த நாம் முயற்சிக்கும் அதே நேரத்தில் காற்றில் ஏற்படும் மாசு அளவையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் மண்ணெண்ணெய் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2012ம் ஆண்டில் ஒரு திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது. அதன்படி, மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்துபவர்கள் அனைவரும் காஸ் அடுப்புக்கு மாற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்காக இலவச காஸ் இணைப்பு மற்றும் அடுப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் 2 லட்சம் குடும்பங்களுக்கு காஸ் இணைப்புடன் அடுப்பு வழங்கப்பட்டது. தற்போது அங்கு மண்ணெண்ணெய் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு விட்டது. மண்ணெண்ணெய் விற்றாலே குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இலவச காஸ் அடுப்பு அளிக்கும் திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டு, அதன்பின் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியிருந்தால், ஒரு கால கட்டத்தில் மண்ணெண்ணெய் பயன்படுத்த தடை விதித்திருக்கலாம். மாநிலம் முழுவதும் இல்லாவிட்டாலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமாவது மண்ணெண்ணெய் விற்க தடை கொண்டு வர அரசு முயற்சிக்கலாம். இது போல் பல முயற்சிகளை ஒரே சமயத்தில் மேற்கொள்வதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement