கல்வி முறையில் மாற்றம் கோகுல மக்கள் கட்சி வலியுறுத்தல்
சென்னை: கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:புனிதமாக கருதப்படும் பெண்மை தற்போது போதை பொருளாக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கது. போதிய மரபை கற்பிக்காததாலும், கூட்டுக்குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னையாலும் இச்சுழல் நிலவுகின்றன. கல்வியறிவும் பாலின பாடத்திட்டத்தின் மூலம் பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிய அரசின் செயல்பாடுகளே இப்பிரச்னைகளுக்கு காரணமாகும். எனவே பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி முறையில் உரிய மாற்றம் செய்ய வேண்டும். தேவையற்ற வலைதளங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.