ஒடிசா
மாநிலம், புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (நால்கோ)
காலியாக உள்ள 125 இன்ஜினியர் பணியிடங்களுக்கு பி.இ. படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணி:
கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னீஸ்: 125 இடங்கள் (பொது - 64, எஸ்சி - 19, எஸ்டி - 9, ஒபிசி - 33). இவற்றில் 15 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது:
30.6.2025
தேதிப்படி 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5
ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10
ஆண்டுகளும் அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
மெக்கானிக்கல்/
புரொடக்சன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல்/ பவர் இன்ஜினியரிங்/
எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேசன்/ டெலிகாம்/ எலக்ட்ரிக்கல்/
மெட்டாலர்ஜிக்கல்/ சிவில்/ ஆர்க்கிடெக்சர்/ செராமிக்ஸ் இன்ஜினியரிங்/
மைனிங் இன்ஜினியரிங்/ கெமிக்கல்/ அப்ளைடு கெமிஸ்ட்டிரி/ கம்ப்யூட்டர்
சயின்ஸ்/ எம்சிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 65 சதவீத
மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக். பட்டம். (எஸ்சி., எஸ்டி பிரிவினர் 55
சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்., பட்டம் பெற்றால் போதுமானது).
மேற்குறிப்பிடப்பட்ட
இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் கேட் - 2014 தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில்
கேட் தேர்வு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டும்
விண்ணப்பிக்கவும்.