இந்திய தேசிய கண்டுபிடிப்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் ஆகலாம் 25 காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரகத்தின் கீழ் உள்ள
சுயஅதிகாரம் பெற்ற அமைப்பான அகமதாபாத்தில் உள்ள இந்திய தேசிய கண்டுபிடிப்பு
நிறுவனத்தில் 25 ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
ஆராய்ச்சியாளர்: 25 இடங்கள்.
சம்பளம்:
ரூ.20,000 - 60,000 மற்றும் இதர படிகள்.
தகுதி:
வேளாண்மை,
கால்நடை அறிவியல், வேதியியல், இன்ஜினியரிங், வணிக மேம்பாடு, இதழியல்
மற்றும் தகவல் தொடர்பியல், ஊரக மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப மேலாண்மை
உள்ளிட்ட பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம். மற்றும்
சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன்அனுபவம்.
வயது:
35க்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரர்கள் http://www.nif.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:10.6.2014.