Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Jun
நாகை மாவட்டத்தில் மாணவனே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்

வேதாரண்யம்: நாகை மாவட்டத்தில் மாணவனே இல்லாத தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காட்டில், 1962ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த கல்வியாண்டில் 5ம் வகுப்பில் 3 மாணவர்களும், 2ம் வகுப்பில் ஒரு மாணவனும் படித்தனர்.5ம் வகுப்பு படித்த 3 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 6ம் வகுப்பிற்கு அருகில் உள்ள வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். 2ம் வகுப்பு படித்த முருகபூபதி தேர்வில் வெற்றி பெற்று 3ம் வகுப்புக்கு சென்றான். முருகபூபதிக்கு 2 ஆசிரியர்கள் பள்ளி திறந்த நாளில் இருந்து பாடம் நடத்தி கொண்டிருந்தனர். திடீரென்று நேற்று முருகபூபதியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று மாணவனின் டி.சியைப் பெற்று சென்றனர். மாணவனே இல்லாத இந்தப் பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் உள்ள நிலையில், பள்ளி மூடுவிழா காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement