திருத்தணி ஜமாபந்தியில் கலெக்டரிடம் 409 மனுக்கள்
திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 3வது நாளாக ஜமாபந்தி நடந்தது.இதில் திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட 409 மனுக்கள் வந்தன. 23 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இம்முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் காசி, பயிற்சி துணை ஆட்சியர் வெங்கடேசன், மாவட்ட நில அளவை பிரிவு உதவி இயக்குனர் கோவிந்தராஜ் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஜமாபந்தியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், 2 முறை பட்டாக கேட்டு மனு கொடுத்தேன் கிடைக்கவில்லை. கலெக்டரிடம் மனு கொடுத்த பிறகுதான் பட்டா கிடைத்துள்ளது‘ என்றார்.