திருத்தணி காந்தி ரோட்டில் ரூ3 லட்சத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு
திருத்தணி: திருத்தணி காந்தி ரோட்டில் வசித்துவரும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, தமிழக முதல்வரின் வறட்சி நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்துளை மற்றும் குடிநீர் பைப் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. திருத்தணி கோ.அரி எம்.பி., புதிய குடிநீர் பைப்பை திறந்துவைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இதில் திருத்தணி நகரமன்ற தலைவர் அ.சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் மாசிலாமணி, கவுன்சிலர்கள் சுரேஷ், தாயுமானவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.