ஆடிஷனுக்கு வந்தால்தான் நடிக்க வாய்ப்பு
சான்ஸ் கேட்டு நடையாய் நடந்து முன்பு நடிக்க வாய்ப்பு பிடித்தார்கள். இப்போது புதுமுகமாக இருந்தாலும், சில படங்களில் நடித்து அனுபவம் பெற்றிருந்தாலும் ஆடிஷன் எனப்படும் தேர்வுக்கு வரச் செய்து அவர்களை நடித்து காட்டச் சொல்லி திருப்தியாக இருந்தால்தான் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
‘மொசக்குட்டி‘ என்ற படத்துக்கு இயக்குனர் ஜீவன், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் ஆடிஷன் நடத்தினர். இதில் ஹீரோ வாய்ப்பு கேட்டு வந்த வீரா தனது அனுபவத்தை கூறும்போது,‘என் குடும்பத்தில் யாருமே சினிமாவில் இருந்தது கிடை யாது.
ஹீரோ ஆசையில் ஆடிஷனில் பங்கேற்றேன். இயக்குனரும் தயாரிப்பாள ரும் என்னை பார்த்ததும், ‘நீ தாடி வளர்த்துக்கொண்டு ஒரு மாதம் கழித்து வா பார்க்கலாம்‘ என்றனர். ரிஜெக்ட் செய்வதற்குத்தான் இப்படி சொல்கிறார்கள் என்று எண்ணினேன். தாடி வளர்த்துக்கு கொண்டு ஒரு மாதத்துக்கு பிறகு சென்றபோது என்னை தேர்வு செய்தார்கள். கிராமத்து வாலிபனாக நடிக்க வேண்டி இருந்ததால் வெயிலில் காய்ந்து கருப்பாக சொன்னார்கள். அதையும் செய்தேன் என்றார்.