தமன்னா படத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் நீக்கம்
ஐதராபாத்: உதவி இயக்குனர்களை தரக்குறைவாக திட்டியதால் தெலுங்கு படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் நீக்கப்பட்டார்.ஜூனியர் என்டிஆர், தமன்னா நடிக்கும் தெலுங்கு படம் ‘ஆகடு. வில்லன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஷூட்டிங்கில் பங்கேற்றார் பிரகாஷ்ராஜ். அப்போது உதவி இயக்குனர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டினாராம். சிறு விஷயங்களுக்கும் கோபத்தை வெளிப்படுத்தி டென்ஷன் ஆனார். நேற்று ஷூட்டிங்கிற்கு வந்த பிரகாஷ்ராஜ் யாரிடமும் சொல்லாமல் சீக்கிரமே புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் பிரச்னை முற்றியது. இயக்குனர் ஸ்ரீனு வைத்லா மற்றும் பட தயாரிப்பாளரிடமும் மோதல் போக்கை பிரகாஷ்ராஜ கடைபிடித்ததால் அவர் மீது இயக்குனர் சங்கத்தில் புகார் தரப்பட்டது. ஷூட்டிங்கில் பங்கேற்க பிரகாஷ்ராஜ் ஒத்துழைக்காததால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மற்றொரு வில்லன் நடிகர் சோனு சூட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் மும்பையிலிருந்து ஐதராபாத் வந்து ‘ஆகடு‘ பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். இதனால் டோலிவுட்டில¢ பரபரப்பு ஏற்பட்டுள்ளது.