ஒரே பாட்டை 2 பேர் பாடியதால் யாருக்கு விருது? பாடகர்கள் மோதல்
திருவனந்தபுரம்: கேரள மாநில திரைப்பட விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாகவிருது அறிவிக்கப்பட்டதும்சர்ச்சைஎழுவதுவாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பிரச்னை தொடர்கிறது. ‘ஒரிசா என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஜன்மாந்திரங்களில்..Õ என்ற பாடலை பாடிய பின்னணி பாடகர் கார்த்திக் சிறந்த பாடகராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இப்பாடலை கார்த்திக் பாடுவதற்கு முன் பிரதீப் சந்திரகுமார் என்பவர் பாடி இருந்தார். படத்தில் பிரதீப் பாடிய பாடலும், ஆடியோ சிடியில் கார்த்திக் பாடிய பாடலும் இடம்பெற்றிருக்கிறது.கார்த்திக்கிற்கு விருது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து பட இசை அமைப்பாளர் ரதீஷ் வேகா ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். கார்த்திக் பின்னணி பாடியது உண்மைதான். ஆனால் காட்சி சூழலுக்கு பிரதீப் குரல் பொருத்தமாக இருந்ததால் அவர் பாடியபாடல்தான் படத்தில் இடம்பெற்றது. ஆடியோ சிடியில்தான் கார்த்திக் பாடல் இடம்பெற்றிருக்கிறது. எனவே விருதை பிரதீபுக்குத்தான் தரவேண்டும் என்றார். இதுதொடர்பாக விருது கமிட்டிக்கு கடிதம் எழுதப்போவதாகவும் அவர் கூறினார்.ஆனால் விருது கமிட்டி நடுவர் ஹரிகுமார் கூறும்போது, ‘விருதுக்கான மனுவில் கார்த்திக் பெயர்தான் இடம்பெற்றுள்ளது. அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என குறிப்பிட்டார்.