ஈரோடு தமிழகத்து இளைஞர்கள், இப்போது நாட்டை சுற்றியிருக்கும் சூழ்ச்சிகளை சுக்கு நூறாக்க வேண்டும் என ஈரோடு பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவித்ரவள்ளி, திருப்பூர் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதன் ஆகியோரை ஆதரித்து ஈரோடு வஉசி மைதானத்தில்
நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி பேசினார். அவர் பேசியதாவது:
ஈரோடு எனக்கு அறிவு, சுயமரியாதை உணர்வு, தமிழ் உணர்வுக்கு வீரப்பால் ஊட்டிய ஊர். தஞ்சை மாவட்டம் திருக்குவளை நான் பிறந்த ஊராக இருந்தாலும், நான்
வளர்ந்த ஊர் திருவாரூர் என்றாலும், என்னை தமிழ் உலகிற்கு தந்த ஊர் ஈரோடு என்று சொன்னால் மிகையாகாது. ஈரோட்டில் பெரியாரின் குடியரசு அலுவலகத்தில் நான்
பணிபுரிந்தபோது எனது வயது 20. இன்று 91 வயது. ஈரோட்டில் இருந்து புறப்பட்ட இளைஞன்தான் இன்று உங்களுடன் அமர்ந்திருக்கும் கருணாநிதி. தமிழகத்து இளைஞர்கள்
வீரம் கொண்டவர்களாக, வீர கதை எழுதுபவர் களாக, எதிரிகளை புறம் காண்பவர்களாக, முரசு ஒலிப்பவர்களாக விளங்க வேண்டும் என்ற உறுதியோடுதான் இந்த
கூட்டத்தில் குழுமியிருக்கும் உங்களை காண்கிறேன்.
உங்கள் உள்ளத்தில் எழுந்த வீர உணர்வு, நாட்டை தூக்கி நிறுத்த வேண்டும், நாட்டை சுற்றிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக்க வேண்டும். இளைஞர் பட்டாளமே, மாணவர்
பட்டாளமே... இந்த கலைஞர் உங்களால் தலைவர் என்று அழைக்கப்படுகிறார் என்றால் அதற்கு காரணம் ஈரோடுதான். பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மான உணர்வு
நீங்களும் பெற வேண்டுமானால் உங்களது ஆசிரியராக, பேராசிரியராக ஏற்க வேண்டியவர் பெரியார்.
இந்த தேர்தல் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அருமையான சந்தர்ப்பம். நம் வாழ்க்கையை, மொழியை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியது யார்? இனிமேல், நாம் யார்
யாருக்கோ அடிமைப்பட்டு, பெருஞ்சாதிக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, நாயினும் கேவலமாக நலிந்து, நலிந்து அலைய வேண்டியது வரும். இந்த நிலைக்கு ஆகிவிடாதீர்கள்
என்பதை உங்கள் உள்ளத்தில் பதியவைக்க, உங்களை சந்திக்க வந்துள்ளேன். இதுவரை வீசிய அலை தீர்ந்து, புதிய அலை புறப்பட வேண்டும். மோடி அலை வந்துவிட்டதாக
சொல்கிறார்கள். நம் எதிர்பார்ப்புகளை வீழ்த்த பயங்கரமான சூழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாட்டை, ஏன் இந்தியாவை எச்சரிக்கும் நிலை வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் ஜெயலலிதா, சமச்சீர் கல்வியை ஒழித்து கட்டுவேன் என வாளை உருவிக்கொண்டு புறப்பட்டார். ஆனால், இதை மாணவர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை, நாமும் ஏற்றுக்கொள்ளவில்லை, தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை
ஜெயலலிதா சென்றார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நல்லகாலம் நமது கல்விமுறை தப்பித்தது. மாணவர்கள் வாழ்வு காப்பாற்றப்பட்டது.
இப்படியே பல காரியத்தை அவர் நிகழ்த்தினார்.
ஜனநாயக முறையில் எதையும், யாரும் ஏற்றுக்கொண்டால் அது ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. ஜெயலலிதாவுக்கு பிடிக்காத இன்னொரு காரியமும் உண்டு. நமது
மாநிலத்துக்கு ஒரு நல்ல திட்டம் வருகிறது என்றால் யாராவது அதை வேண்டாம் என்பார்களா? அண்ணா காட்டிய திட்டம் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால்
தமிழ்நாட்டில் வர்த்தகம் செழிக்கும். போக்குவரத்து மேம்படும். வறுமை நீங்கும், செல்வம் கிடைக்கும். ஆனால், இந்த திட்டம் தேவையில்லை என்கிறார் ஜெயலலிதா. ‘தமிழ்நாடு வளம் பெறும் என்பது‘ ஜெயலலிதா காதில் ஈயம் காய்ச்சி ஊற்றும் சொல்லாக உள்ளது.
அதனால்தான் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளார். தமிழ்நாடு வரும் காலங்களில் கெட்டு, குட்டிச்சுவராக வேண்டும் என நினைக்கிறார் ஜெயலலிதா. அண்ணாவைவிட
இவர் பெரிய பொருளாதார நிபுணரா? தமிழ்நாடு வளமாகுவதை நான் நினைத்துக்கூட பார்க்கமாட்டேன் என்கிற அங்கலாய்ப்பு ஜெயலலிதாவிடம் உள்ளது. அதனால்தான்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை ஆதரிக்கலாமா? அவரை இங்கேயே தட்டிக்கேட்காமல், டெல்லிக்கு அனுப்பினால், நாடாளுமன்றத்துக்கு எத்தகைய
அபாயம் ஏற்படும். அதை தடுக்கவேண்டும். அந்த அபாயம் ஏற்பட அச்சாரம் போடாதீர்கள். அதற்கு வழிவகுத்து விடாதீர்கள்.
பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தோல் உரித்து காட்டுகிறது. ஜெயலலிதா குவித்த சொத்து பட்டியலை நீதிமன்றமே வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை இந்த பாடுபடுத்துகிறவரை, டெல்லிக்கு அனுப்பிவைத்தால் என்ன ஆகும்? நாடாளுமன்ற கட்டடமே காணாமல் போய்விடும். எனவே, நீங்கள் எச்சரிக்கையுடன்