ஒலிம்பிக் தொடக்க நிகழச்சியில் ரஷ்ய அதிபர் புடினுடன் சீன அதிபர் சந்திப்பு
சோச்சி: ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவின் போது ரஷ்ய அதிபர் புடினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நேற்று குளிர்கால ஒலிம்பிக் தொடங்கியது. விழாவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க உக்ரைன் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சோச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக உக்ரைனில் நிலவி வரும் அரசியல் நிலவரம் குறித்து புடினுடன் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து புடினின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ரஷ்ய, சீன அதிபர்கள் இருவரும் சிரியா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர் என்று தெரிவித்தார்.