Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
08
Feb
மொழிபெயர்ப்பாளர் கேட்கிறார் சிலை கடத்தல் மன்னன் கபூர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் மனு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஜெயங்கொண்டம்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் tஅடுத்த சுத்தமல்லி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 2008 ஏப்ரல் 13ம் தேதி சுப்ரமணியர், வள்ளி ஆறுமுகம், சிவகாமி, நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரமூர்த்தி, பரமசிவம் உள்ளிட்ட 26 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஐம்பொன் சிலைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றைக் கைவினைப் பொருட்கள் எனக் கூறி அமெரிக்கா கொண்டு சென்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர்(62) என்பவர் விற்று வந்தது தெரிய வந்தது. ஜெர்மனியில் இருந்த கபூரை இன்டர்போல் போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கபூர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை போலீசார் கபூரை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது கபூர், தனக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை என மாஜிஸ்திரேட் முத்துமுருகனிடம் மனு அளித்தார். மாஜிஸ்திரேட், கபூரை மீண்டும் வரும் பிப்ரவரி 21ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர், கபூர் சென்னை புழல்சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்  செல்லப்பட்டார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement