Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
08
Feb
ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 57 பேர் மருத்துவமனையில் அனுமதி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பாட்னா:பீகாரில் ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 57 பேர் உடல் நலம¢ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் ரோக்தாஸ் மாவட்டத்தில் சுரஜ்புரா என்ற இடத்தில் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்தும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. திடீரென மாணவர்கள் வாந்தி ஏற்பட்டு மயங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட¢டது.

இந்த சம்பவம் குறித்து கல்வி அதிகாரி ராஜேஷ் குமார் கூறியது: போட்டிகள் நடைபெற்றுகொண்டிருந்த போது சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டதையடுத்து மயங்கி விழத் தொடங்கினர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணையில் பள்ளிக்கு வெளியே இருந்த காட்டாமணக்கு செடியில் இருந்த விதைகளை பருப்பு என நினைத்து சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 57 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 12 வயதிற்கும் குறைவானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 40 பேர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜேஷ்குமார் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டாமணக்கு செடிகள் பொதுவாக பயோ டீசல் தயாரிப்புக்காக வளர்க்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement