Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Feb
பட தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு பிரபுதேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஹாலிவுட் கம்பெனி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மும்பை:புதிய படத்துக்கு பிரபுதேவா வைத்துள்ள பெயரை மாற்றாவிட்டால் வழக்கு தொடரப்படும் என ஹாலிவுட் கம்பெனி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரபுதேவா இந்தியில் இயக்கும் புதிய படம் ‘ஆக்ஷன் ஜாக்சன்‘. அஜய் தேவ்கன் ஹீரோ. சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம் ஹீரோயின்கள். இந்த பட டைட்டிலால் பிரச்னை எழுந்துள்ளது.

ஹாலிவுட் பட நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் பட டைட்டிலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு ‘ஆக்ஷன் ஜாக்சன்‘ என்ற டைட்டிலில் ஹாலிவுட் படத்தை தயாரித்தோம். கார்ல் வெதர்ஸ், ஷரோன் ஸ்டோன் நடித்தனர். இப்படத்தின் டைட்டில் உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் படத்துக்கு அந்த தலைப்பை பயன்படுத்த கூடாது. இதுபற்றி 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் இயக்குனர் பிரபுதேவா மற்றும் தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உடனடியாக பட டைட்டிலை மாற்றி அறிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்தி பட நிறுவனம் தரப்பில் கூறும் போது, ‘ஆக்ஷன் ஜாக்சன் என்ற டைட்டில் மும்பையில் உள்ள பட தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு உள்ளிட்ட அமைப்புகளில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. இதுதொடர்பாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு பதில் அனுப்பப் பட்டு உள்ளது‘ என்றனர்.  இந்த படத்துக்கு முன்பு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ‘ராம்போ ராஜ்குமார்‘ என்ற படத்துக்கும் தலைப்பு பிரச்னை எழுந்தது. பிறகு ‘ராம்போ‘ என்ற பெயருக்கு பதிலாக ‘ஆர் ராஜ்குமார்‘ என்று டைட்டிலை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran