Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
06
Feb
கனடாவில் இன்டர்நெட் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

டொரன்டோ:கனடாவில் வசிக்கும் இந்தியர், இன்டர்நெட்டில் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீசாரால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கனடாவின் சஷ்கட்செவான் மாகாணத்தின் ரெஜினா பகுதியில் வசிப்பவர் யஷ்ஹன்தீப் திலான். இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறினார். இன்டர்நெட்டில் சாட் செய்வதை வழக்கமாக கொண்ட அவர், கனாடாவில் எட்மான்டர் லோக்கல்ஸ் என்ற இன்டர்நெட் சென்டரில் சாட்டிங்கில் இருந்த போது 13 வயது சிறுமி என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது.

அது முதல் தொடர்ந்து இருவரும் சேட் செய்ய ஆரம்பித்தனர். இதில் நெருக்கம் அதிகரித்தது. செக்ஸ் பற்றி சேட்டிங் செய்ய ஆரம்பித்த திலான், வரம்பு மீறி அந்த சிறுமியிடம் சேட்டிங்கில் பாலி யல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் திலான் அந்த சிறுமியை சந்திக்க விரும்பி அதற்காக ஏற்பாடு செய்தார். 2010ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிறுமியை சந்திக்க அவர் ரெஜினா பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திலானுக்கு 3 மாத சிறை தண்டனையும் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்துவது குறித்து 3 ஆண்டு பயிற்சியும் எடுத்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியாசமான இந்த தீர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டனை காலத்துக்கு பிறகு திலான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran