சென்னையில் ஆண்களுக்கான ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், நியூசிலாந்தின் மைக்கேல் வீனசை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 6-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஸ்பெயினின் ஜெரார்டு கிரானோலர்சை 6&2, 6&1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.