இந்தியக் கடலோர காவல்படையில் டெக்னிகல் பணிகள்
நமது நாட்டில் கடலோர
எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியக் கடலோரக் காவல் படை
மேற்கொண்டுள்ளது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவிலுள்ள காலியிடங்களை
நிரப்புவதற்காக விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.08.2025 முதல் 31.07.1996க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
10ம்
வகுப்பை முடித்திருக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி
நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன்
மெக்கானிகல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய
ஏதாவது ஒரு படிப்பில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். சில
குறைந்த பட்ச உடல் தகுதிகளும் இந்தப் பதவிக்கு கூடுதல் தேவையாக இருக்கும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை. சென்னை ராயபுரத்திலுள்ள மையத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.02.2025
இணையதள முகவரி:
http://www.joinindiancoastguard.gov.in/