ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தை ரத்து செய்ய தெலுங்குதேச எம்எல்ஏ கோரிக்கை
திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ காலிமுத்து கிருஷ்ணம நாயுடு கூறினார். இதுகுறித்து அவர் நேற்று திருப்பதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி கோயிலில் கூடுதலாக 5 ஆயிரம் விஐபி தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாக வினியோகித்துள்ளனர். இதில் விஐபிக்கள் 3 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்திருப்பார்கள். மற்றவர்கள் முறைகேடாக விஐபி பாஸ் வாங்கியவர்கள். ஆர்ப்பாட்டம் செய்த சாதாரண பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தவறு.