Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Jan
விமானத்தில் அழுததால் குழந்தைக்கு பளார் விட்ட பயணிக்கு 8 மாத சிறை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

அட்லாண்டா:விமானத்தில் அழுது தொல்லை கொடுத்த ஒரு வயது குழந்தையின் கன்னத்தில் பளார் என்று அறைந்த அமெரிக்க பயணிக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெசிகா பென்னட் என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். இவருக்கு அருகே ஜோ ரிக்கி ஹண்ட்லி என்பவர் பயணம் செய்தார்.

ஜெசிகாவின் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தது. சமாதானப்படுத்த முடியாமல் ஜெசிகா திணறினார். இந்நிலையில் குழந்தை அழுவதை கண்டு ஜோ ரிக்கி எரிச்சல் அடைந்தார். குழந்தையை சமாதானப்படுத்தும்படி ஜெசிகாவிடம் சண்டையிட்டார்.

ஆனால், குழந்தை தொடர்ந்து அழவே கோபமடைந்த ஜோ ரிக்கி, ஒன்றரை வயது குழந்தையின் கன்னத்தில் திடீரென பளார் என அறைந்தார். அதனால் ஜெசிகாவும் மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அட்லாண்டா விமான நிலையத்தில் ஜெசிகா கொடுத்த புகாரின் பேரில் ஜோ ரிக்கியை போலீசார் கைது செய்தனர்.

இதில் குழந்தையின் இடது கண்ணின் கீழே லேசான காயம் ஏற்பட்டதை போலீசார் பின்பு விசாரணையின் போது உறுதி செய்தனர். நீதிமன்ற விசாரணையில் ஜோ ரிக்கி குழந்தையை அறைந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தனது நடத்தைக்காக ஜெசிகாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

எனினும் அவரது குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அமெரிக்க நீதிமன்றம் 8 மாதம் சிறை தண்டனை விதித்தது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement