Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
02
Jan
‘கேரவேன் சரியில்லன்னு சண்டை போடுங்க’ பிரியாவை உசுப்பிவிட்ட இயக்குனர்


சென்னை:கேரவேன், ஓட்டல் அறை சரியில்லன்னு சண்டை போடுங்க என்று பிரியா ஆனந்தை உசுப்பிவிட்டார் புது இயக்குனர்.
விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘அரிமா நம்பி. பிரியா ஆனந்த் ஹீரோயின். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சிவமணி இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய  ஆனந்த் சங்கர் இயக்குகிறார். அவர் ஹீரோயின் பிரியா ஆனந்தை உசுப்பிவிடும்படி நிருபர்கள் சந்திப்பின்போது பேசினார். அவர் கூறியதாவது:

உதவி இயக்குனராக பணியாற்றியபோது நிறைய ஹீரோயின்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் என்னென்ன கேட்பார்கள் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ‘எதிர்நீச்சல்‘ ஹிட் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் கோலிவுட்டில் டிமாண்ட் உள்ள ஹீரோயின்கள் பட்டியலுக்கு வந்துவிட்டார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் அவர் எதுவும் டிமாண்ட் செய்வதில்லை. சொல்லப்போனால் ஹீரோயின் என்ற பந்தாவே அவரிடம் இருக்காது. ஏங்க இப்படி அமைதியா இருக்கீங்க. நீங்க இந்த படத்தோட ஹீரோயின் கொஞ்சமாவது அதை வெளிபடுத்துங்க. இல்லையென்றால் நீங்கதான் ஹீரோயினுன்னு நாங்க எப்படி நம்பறது? கேரவேன் சரி இல்லை, ஓட்டல்ல ரூம் வசதியா இல்லன்னு சண்டை போடுங்க. இப்படி எதுவுமே கேக்காம இருந்தா எப்படி? என்று அவரிடம் ஜோவியலாக கேட்பேன். ஆனாலும் அதற்கெல்லாம் அவர் ஒரேயொரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு போய்விடுவார். இவ்வாறு ஆனந்த் ஷங்கர் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran