Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
14
Dec
ஸ்ருதியுடன் சிண்டு முடியாதீர்கள்


சென்னை:‘ஸ்ருதிக்கும் எனக்கும் சிண்டு முடியாதீர்கள் என்றார் தமன்னா.தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா திடீரென்று தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். தமிழில் சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக வந்த வாய்ப்புகளையும் ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் அஜீத்துடன் ‘வீரம் படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ரீ என்ட்ரிக்கு சரியான படம் என்பதால் ஒப்புக் கொண்டார். தற்போது அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்கு படம் தோல்வி அடைந்ததால் தமன்னா தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்ததாக தகவல் வெளியானது. இதையறிந்து உர்ரானார். இதுபற்றி தமன்னா கூறும் போது, ‘வீரம் படம் ரொம்பவும் சென்டிமென்ட்டான படம். அஜீத்துடன் நடிப்பது சந்தோஷம். நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பல காட்சிகள் படத்தில் உள்ளன, நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன். ஆனால் என்னை பற்றி தவறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். ஸ்ருதிக்கும் எனக்கும் இடையே சண்டையா என்கிறார்கள். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. என் வாய்ப்பை ஸ்ருதியோ, அவரது வாய்ப்பை நானோ தட்டி பறிப்பதில்லை. எங்கள் வேலையை ஈடுபாடுடன் செய்து வருகிறோம். எங்களுக்குள் சிண்டு முடிவதை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran