கார்த்தி படத்துக்கு யு/ஏ தான் சென்சார் குழு கறார்
சென்னை:கார்த்தி நடித்திருக்கும் பிரியாணி படத்துக்கு யு/ஏ சான்றுதான் தரமுடியும் என்று ரிவைசிங் கமிட்டி கறாராக கூறிவிட்டது.வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, மன்டி தாக்கர் நடித்திருக்கின்றனர். இதில் இளம் பெண்களை கவர்ந்திழுக்கும் பிளேபாய் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். இப்படம் தணிக்கை சான்றிதழுக்காக திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். ஆனால் படத்துக்கு யு சான்றிதழ் கேட்டு தணிக்கை குழுவின் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த மறு ஆய்வுக்குழு அதிகாரிகள் இப்படத்துக்கு யு சான்றிதழ் தர முடியாது. படத்தில் ஹீரோ, ஹீரோயின் நடித்திருக்கும் நெருக்கமான காட்சிகள் இருப்பதால் யு/ஏ சான்றிதழை மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். யு சான்று இருந்தால்தான் அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும். யு/ஏ சான்றுக்கு அது கிடைக்காது.