ஹாலிவுட் 3டி படத்தை உருவாக்கும் இந்திய கம்பெனி
சென்னை:இந்தியாவை சேர்ந்த பென்டா மீடியா நிறுவனம் ‘கலிவர் அன்ட் த லில்லிபுட்ஸ் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் 3டி அனிமேஷன் படமாக தயாரித்திருக்கிறது. ஹாலிவுட்டில் தயாரான ‘அவதார் மோஷன் கேப்சர் தொழில் நுட்படத்தில் உருவாக்கப்பட்டதுதான். நடிகரை நடிக்க வைத்து அவர்களின் முகபாவனை, உடல் அசைவுகளை மட்டும் பதிவு செய்து அதை கம்ப்யூட்டரில் அனிமேஷன் கேரக்டர்கள் மீது செலுத்தி அப்படியே படமாக்குவதுதான் மோஷன் கேப்சர்.
முன்பெல்லாம் அனிமேஷன் படம் ஒன்றை தயாரிப்பதற்கு 5 வருட காலம் ஆனதுடன் 3 ஆயிரம் வல்லுனர்கள் பணியாற்ற வேண்டி இருந்தது. இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் மோஷன் கேப்சரில் படம் தயாரிக்கும் கால அளவும், தொழில் நுட்ப வல்லுனர்கள் எண்ணிக்கை, பொருட் செலவும் பெரும்பகுதி குறைந்துவிட்டது. இதை செயல்வடிவில் நிரூபிக்கும் வகையில் 1930ல் 2 டி அனிமேஷன் முறையில் உருவான ‘கலிவர் அன்ட் த லில்லிபுட்ஸ்‘ என்ற படம் 3டி வடிவில் அனிமேஷன் கேப்சர் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை பென்டா மீடியா 3டியில் உருவாக்கியுள்ளது. இப்படம் இந்தியாவில் விரைவில் வெளிவரவுள்ளது.