அழகிகளிடம் சிக்கும் கணவர்கள் கதை
சென்னை:த்ரிரோசஸ், ராமகிருஷ்ணா, சேவல் போன்ற படங்களில் நடித்தவர் ஜெய் ஆகாஷ். அவர் கூறியதாவது: தெலுங்கில் நடித்த ‘ஆனந்தம் படத்தை தமிழில் ‘இனிது இனிது காதல் இனிது என்ற பெயரில் இயக்கி நடித்தேன். சமீபகாலமாக நான் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையை மாற்ற ‘ஆனந்தம் படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஆனந்தம் ஆரம்பம்‘ என்ற படத்தை இயக்கி நடிக்கிறேன்.
மனைவிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கோவா செல்லும் 3 கணவர்கள் அங்கு 3 அழகிகளுடன் காதல் வயப்படுகின்றனர். அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் காமெடி கலாட்டாவாக அமைகிறது. ஏஞ்சல் சிங், ஜியா கான், அலக்கியா, மான்சி, ரம்யா ஆகிய 5 பேர் ஹீரோயின்கள். தேவராஜ் ஒளிப்பதிவு. சுமன் இசை. கணேஷ், என்.ஜே.சதீஷ் தயாரிப்பு.