Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
15
Nov
சீன மாப்பிள்ளை வழங்கினார் கட்டிக்க போகும் பொண்ணுக்கு 90 கோடி திருமண பரிசு


ஷாங்காய்:சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளது. இங்கு வாழும் மக்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. ஷாங்காயில் வசிக்கும் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். இதனால் அங்கு திருமணங்களை மிகவும் விமரிசையாக நடத்துகின்றனர்.

ஆனால், திருமணங்களை எளிமையாக நடத்துங்கள் என்று அரசு தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் மாகாணம் ஷியாங்ஜி நகரை சேர்ந்த செல்வந்தர் ஒருவர், தான் மணக்க போகும் பெண்ணுக்கு கட்டுக் கட்டாக பணம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தான் மணக்க போகும் மணமகளுக்கு மூங்கில் கூடைகள், பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணத்தை அழகாக அடுக்கி, அவற்றை விலை உயர்ந்த சொகுசு காரில் பணிப்பெண்கள் சூழ ஊர்வலமாக எடுத்து செல்லும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகின. இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் மாபெரும் தலைவர் மாவோவின் படங்கள் அச்சடிக்கப்பட்ட ரூ.90 கோடி மதிப்புள்ள சீன பணத்தை அடுக்கி வைத்து அதை காட்சி பொருளாக திருமணங்களை ஆடம்பரமாக நடத்தலாமா என இணையதளத்தில் சீனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement