சென்னை:‘விஸ்வரூபம் 2“ வெறும் மசாலா சேர்த்த வடைகறி அல்ல என்றார் கமல்ஹாசன்.விஸ்வரூபம் 2ம் பாகம் இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். பூஜாகுமார், ஆண்ட்ரியா ஹீரோயின்கள். இப்படம்பற்றி கமல் கூறியதாவது:விஸ்வரூபம் 2 வடைகறிபோல் மசாலாவாகவும், முதல்பாகத்தின் முடிவுப் பகுதியாகவும் இருக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் இப்படத்துக்கு செலவிடப்பட்டிருக்கும் உழைப்பு முதல் பாகத்தைவிட பல மடங்கு அதிகம். இதை ஏன் கூறுகிறேன் என்பதை நீங்கள் படம் பார்த்தபிறகு புரிந்துகொள்வீர்கள். கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாக படம் இருக்கும். படம் சிறப்பாக வந்ததில் எனக்குள் கிடைத்த திருப்தி, உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்) கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.இவ்வாறு கமல் கூறினார்.