பாசிட்டிவ் கேரக்டருக்கு மாறும் அஜீத்
சென்னை:தொடர்ந்து வில்லத்தனமான கேரக்டர்களில் நடித்த அஜீத், இப்போது பாசிட்டிவ் கேரக்டருக்கு மாறியுள்ளார்.வசீகர ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அஜீத் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘வாலி படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். இதில் ஒரு கதாபாத்திரம் வில்லத்தனமானது. அது ஒர்க் அவுட் ஆனது. இதையடுத்து ‘வரலாறு, ‘பில்லா, ‘மங்காத்தா ‘ஆரம்பம் படங்களில் எதிர்மறையான வேடங்களை ஏற்று அசத்தினார்.
சென்டிமென்ட்டாக இந்த கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதால் அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களும் அதேபாணியில் ஸ்கிரிப்ட் சொல்கிறார்கள். அடுத்து ‘சிறுத்தை சிவா இயக்கும் ‘வீரம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் என்ன கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் யு டியூபில் வெளியாகி உள்ளது. இதில் பயங்கரமான சண்டை காட்சியில் துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் அஜீத், நல்லதை மட்டுமே செய்யும் ஹீரோவாக பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கிறாராம். அதுவும் படம் முழுக்க வெள்ளை வேட்டி, சட்டையிலே வருகிறார். ரச¤கர்களுக்கு இந்த வேடமும் பிடிக்கும் என்கிறது பட வட்டாரம்.