அப்பா-அம்மாவை நடிக்க வைக்க நடிகை சான்ஸ் கேட்பதாக புகார்
சென்னை:அப்பா-அம்மாவை நடிக்க வைக்க மேக்னா சான்ஸ் கேட்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அவரே பதில் கூறியிருக்கிறார்.
நடிகை ஆண்ட்ரியாவை தொடர்ந்து ரம்யா நம்பீசன் சொந்த குரலில் பின்னணி பாடுகிறார். அந்தபட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் மேக்னா ராஜ். இவர் ‘உயர்திரு 420, ‘காதல் சொல்ல வந்தேன் படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் நடிக்கும் பாஹுபராக் என்ற படத்துக்காக பின்னணி பாடுகிறாராம் மேக்னா.
இது பற்றி மேக்னா கூறும்போது, ‘இயக்குனர் சுனில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு பிரபல நடிகை பாடினால் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதுபற்றி என்னிடம் கேட்டபோது ஒப்புக்கொண்டேன். பாடல் பதிவின்போது ஒரு வித பதற்றத்துடனே இருந்தேன். இப்படத்தில் ஒரு காட்சியில் எனது பெற்றோர் நடித்திருக்கின்றனர். அவர்களை கண்டதும் எனது நடிப்பைற்றி என்ன சொல்வார்களோ என்று பயந்துகொண்டிருந¢தேன். ஆனால் என் அப்பாவே நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டினார். இதைவிட என்ன சந்தோஷம் இருக்கிறது அவர் அப்படி கூறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நடிப¢பதற்கு நான்தான் காரணமா, அவர்களுக்கு வாய்ப்பு கேட்கிறேனா என்றெல்லாம் கேட்கிறார்கள். அதற்கு எனக்கு அவசியம் கிடையாது என்றார்.