Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
23
Sep
தீபிகா படுகோன் மீது போலீசார் வழக்கு பதிவு


மும்பை:மத உணர்வுகளை தூண்டும் விதமாக தீபிகா படுகோன் நடித்துள்ளாரா என்பது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். ரஜினியின் ‘கோச்சடையான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர் இந்தியில் நடித்துள்ள படம் ‘ராம் லீலா. ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் விழாக்கள் மும்பையில் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக வழக்கறிஞர் பவன் சர்மா என்பவர் மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இதுபற்றி சர்மா கூறும்போது, ‘ராம் லீலா என்ற படம் வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்துவதற்காக புரமோஷன் விழாக்கள் நடந்து வருகின்றன.

இப்படத்தில் வரும் காட்சிகள் மத உணர்வுகளை தூண்டி விரோதத்தை வளர்ப்பதாக அமைந்துள்ளது. எனவே இதுகுறித்து ஷியாம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். படத்தில் நடித்துள்ள ரன்வீர், தீபிகா மீதும் புகார் தந்தேன். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் என தெரிவித்தார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran