சென்னை:தமிழில் யுவன் இசை அமைத்த படத்துக்கு இந்தியில் அனிரூத் இசை அமைக்க உள்ளார்.2007&ம் ஆண்டு தமிழில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்ற படம் ‘சென்னை 28’. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். இதை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ‘கிரிக் கிட்’ என்று உத்தேசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியில் இயக்கப்போவது வெங்கட்பிரபு இல்லையாம். யாசாத் என்பவர் இயக்க உள்ளார். ‘லஞ்ச் பாக்ஸ்’ என்ற இந்தி படத்தை தயாரித்துள்ள விவேக் ராகவாச்சாரி, பிஜோய் நம்பியாருடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் நடிப்பவர்கள் எல்லாம் புதுமுகங்கள்தான். தமிழில் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
இந்தி ரீமேக்கிற்கு அனிரூத்தை இசை அமைக்க கேட்டுள்ளனர். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் கைநிறைய இருப்பதால் ‘கிரிக் கிட்’ படத்துக்கு இசை அமைப்பதற்கான ஒப்புதலை அனிரூத் இன்னும் தரவில்லையாம்.