Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
17
Aug
80வது பிறந்த தினம் முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மலர்தூவி மரியாதை


சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த தினமான இன்று, அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் இரண்டாம் பதிப்பை அவர் வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 80வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. முரசொலி வளாகத்தில் உள்ள மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்து, மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ‘முரசொலி மாறன் புகழ் ஓங்குக’ என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர். பின்னர், மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் இரண்டாம் பதிப்பை கருணாநிதி வெளியிட்டார். நூலை முனைவர் மா.நன்னன் பெற்று கொண்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, ஆர்.டி.சேகர், பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், ரகுபதி, சுரேஷ்ராஜன், சாமிநாதன், என்.செல்வராஜ், எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அன்பரசன், கேபிபி.சாமி, பொங்கலூர் பழனிசாமி, எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், காந்திசெல்வன், வசந்திஸ்டான்லி, புஷ்பலீலா ஆல்பன் எம்எல்ஏ, தொமுச பேரவை தலைவர் பேரூர் நடராஜன், தொழிலாளர் அணி செயலாளர் ரத்தினசபாபதி, முன்னாள் மேயர்கள் மா.சுப்பிரமணியன், சா.கணேசன் மற்றும் அமிர்தம், கு.க.செல்வம், சேகர்பாபு, இளைஞர் அணி நிர்வாகிகள் மகேஷ்குமார், பிரபாகர் ராஜா, சுரேஷ், சிங்காரம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பலராமன், சிவாஜி, மகளிர் அணி இந்திரகுமாரி, பூங்கோதை, சேலம் சுஜாதா, மாணவர் அணி செயலாளர் இல.புகழேந்தி, வக்கீல்கள் ஆர்.எஸ்.பாரதி, கல்யாணசுந்தரம், கிரிராஜன், சண்முகசுந்தரம், ரவிசந்திரன், பரந்தாமன், ஆறுமுகம், ரவி, ரகு, தலைமை நிலைய செயலாளர் சதாசிவம், விபி மணி, காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran