சினிமாக்காரர்களுக்கு சமூக அக்கறை இல்லையா? அர்ஜுன் பேட்டி
சென்னை:‘சினிமாக்காரர்களுக¢கு சமூக அக்கறை இல்லையா என்பதற்கு பதில் அளித்தார் அர்ஜுன்.அவர் அளித்த பேட்டி:‘நாட்டுபற்றுள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்? என்கிறார்கள்.
எனது தந்தைக்கு நாட்டுப் பற்று அதிகம். எனக்கும் அது இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. தற்போது இயக்கி நடித்து வரும் ‘ஜெய்ஹிந்த் 2 கல்வியின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தும். சினிமாக்காரர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று சிலர் சுமத்தும் குற்றத்தை என்னால் ஏற்க முடியாது. சினிமாவை தவிர்த்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சமூகத்தின் அங்கமாக இருக்கிறது. அதில் உள்ள குறைபாடுகளையும் களைய வேண்டும்.
தேசப்பற்று எல்லோருக்கும் வேண்டும். முன்பெல்லாம் நாடு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று சொன்னது பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது.
நாட்டு மக்களுக்காக நாடு என்ன தந்திருக்கிறது என்று கேட்கும் காலமாக உள்ளது. எல்லா குறைபாடுகளுக்கும் வழிசொல்லும் அளவுக்கு நான் ஜீனியஸ் கிடையாது. சமூகத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதனாகவே என்னை பாவித்து வாழ்கிறேன்.